சீன நாட்டின் தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான்மாகாணத்தில் திங்கள்கிழமையான நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தின் மையத்துக்கு 5 கி.மீ. தொலைவில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. நில அதிர்வால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 65 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். பாதுகாப்புக் கருதி நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் இருந்த 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 16 பேரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. அந்த பகுதியின் பல இடங்களில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.