திருச்சி: பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர்கள் எந்தப் போராட்டத்தில் ஈடுபட்டாலும், அவர்களை எட்டிப் பார்க்கக்கூட வராத ஆட்சியாளர்கள்தான் இருந்தனர். ஆனால், நாங்கள் ஆசிரியர்களின் வலியையும், வேதனையையும் அறிந்தவர்கள். எனவே, நிதிநிலைக்கு ஏற்ப ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.