சுதந்திர தினம் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்க முன்பே அரசு சார்பில் ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுமுறை என்பதால் முன்னெச்சரிக்கையாக ஆகஸ்ட் 14ஆம் தேதியே மது பிரியர்கள் மதுபான கடைகளில் ஸ்டாக் வைத்து மதுவை வாங்கியுள்ளனர். இதனால், ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரே நாளில் ரூ.273.92 கோடிக்கு மது வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், குறிப்பாக சென்னை மண்டலத்தில் ரூ.55.77 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.53.48 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.54.12 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.58.26 கோடிக்கும், கோவையில் ரூ.52.29கோடிக்கும் விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.