தமிழ் மொழியில் வெளியாகும் திரைப்படங்களை உடனுக்குடன் இணையத்தில் வெளியிட்டு தமிழ் திரையுலகிற்கே சிம்மசொப்பனமாக இருந்தது “தமிழ் ராக்கர்ஸ்” இணையதளம். தற்போது தமிழ் ராக்கர்ஸ்க்கே தமிழில் வெப் சீரிஸ் உருவாக்கப்பட்டு, வெப் சீரிஸின் டீசர், சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. திரைப்படங்களை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிடப்படுவதை கதைக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள “தமிழ் ராக்கர்ஸ்” வெப் சீரிஸ் ஏவிஎம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஈரம் திரைப்பட இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய், வாணிபோஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.