சென்னை: வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணண் கூறியிருப்பதாவது:- சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. ஈரோடு உள்ளிட்ட சில நகரங்களில் 110 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இந்நிலையில் இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை வெயில் அதிகமாக இருக்கும்.தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பில் இருந்து 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிக பட்ச வெப்ப நிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 27 முதல்28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும், 11-ந்தேதி வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.