இங்கிலாந்து நாட்டின் பெர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும் 22ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி கோலாகலமாக தொடங்கி நேற்று முன்தினம் ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி வான வேடிக்கைகளுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில், 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களுடன் 4ஆம் இடத்தை பிடித்து சாதனை படைத்த நம் இந்திய வீரர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில், காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில், சீனியர் வாள்வித்தை பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தின் பவானி தேவி கலந்து கொண்டு ஆஸ்திரேலிய வீராங்கனை வஸ்லேவாவை 15-10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளார்.