கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவசியமற்ற புகாரை ஆளுநர் ஆர் என் ரவி சொல்லி இருக்கிறார் கோவை வழக்கை என்.ஐ ஏ வழங்கியதில் ஏன் இந்த காலதாமதம் என்பதுதான் என்னுடைய கேள்வி என்று பொத்தாம் பொதுவாக பேசியிருப்பதாக முரசொலியில் விமர்சனம் செய்து கட்டூரை வெளியாகியுள்ளது. அதில், ”ஆளுநர் பொறுப்பில் இவருக்கு (ஆர்.என்.ரவி) முதலில் எங்கே எதை பேச வேண்டும் என்ற புரிதல் முதலில் இருக்க வேண்டும். ஒரு தனியார் நிறுவனம் தனது யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் தங்கும் விடுதியை திறந்து வைப்பதற்காக இவரை அழைத்து இருக்கிறது. இந்த இடத்தில் போய் இப்படி கேட்டுள்ளார். ஆளுநர் பதவியில் இருப்பவர் அரசிடம் கேள்வி எழுப்பும் முறை இதுதானா அதுவும் கோவை போன்ற விவகாரத்தில் இப்படி கேட்கலாமா? அதுவும் இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக இருந்தவர் உள்துறையில் இருந்தவர் இப்படி கேட்பதுதான் இவரது பணிக்காலத்தில் பயன் ஆற்றிய முறையா? குறை சொல்வதாக இருந்தால் நாமும் அதிகமாக கேட்போம். இப்போது, இறந்து போன நபரை 2019ஆம் ஆண்டு விசாரித்தது இதே முகமை தானே! அப்போது இருந்தது அதிமுக ஆட்சி. அவரை அந்த ஆட்சியோ, என்.ஐ.ஏ-வோ தொடர்ந்து கண்காணித்ததா? பாஜக ஆட்சியில் தேசிய புலனாய்வு முகமை சட்டத்துக்கு திருத்தம் வந்தபோது திமுக ஆதரித்து வாக்களித்துள்ளது என்பதை மறந்து விட வேண்டாம். பயங்கரவாத நடவடிக்கைகளை தடுப்பதில் உறுதியாக இருப்பது திமுகவிம், அதன் ஆட்சியும் அதன் மீது கலங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தோடு ஆளுநர் இதுபோன்ற கருத்துக்களை பொது வழியில் பொறுப்பற்று பேசக்கூடாது. அவர் இன்னொரு அண்ணாமலையாக ஆக வேண்டாம் தமிழக பாஜக தாங்காது” என்று இன்றைய முரசொலியில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.