புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கிராமத்தில் இருந்து நேற்று இரவு விசைப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்ற 8 மீனவர்கள் தமிழக எல்லைக்குட்டப்பட்ட பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி மீனவர்களின் விசைப்படகை சுற்றி வளைத்துள்ளனர். பின்னர், படகில் இருந்த 8 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் கைது செய்ததுடன் மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய விசை படகையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, தகவலறிந்த மீனவர்களின் கிராம மக்களும் குடும்பத்தினரும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும், மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர மத்திய, மாநில அரசுகளுக்கு அந்த பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.