புதுடெல்லி : தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். நாளை மறுநாள் ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பின் போது கவர்னரின் செயல்பாடுகள் குறித்த கோரிக்கை வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதக்களுக்கு கவர்னர்கள் முடிவெடுக்க குறிப்பிட்ட கால நிர்ணயம் வேண்டும் என்று முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார்.