டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. அங்கு, வரும் 23ஆம் தேதி நடக்கவுள்ள தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி. அதுவரை, பிரிஸ்பேன் நகரின் காபா மைதானத்தில் இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளது. அதன்படி, இன்று ஆஸ்திரேலியா அணியுடன் பயிற்சி போட்டியில் இந்தியா விளையாடுகிறது. இந்திய நேரப்படி இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரூன் ஃபின்ச் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்துள்ளார். இதையடுத்து, இந்த அணி பேட்டிங் செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்த்து அக்டோபர் 19ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 1:30 மணிக்கு விளையாடவுள்ளது.