8ஆவது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் குரூப்-1 பிரிவில் அயர்லாந்து அணிக்கு எதிராக நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது. இதில், டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் ஆன்டி பால்பிர்னி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து அயர்லாந்து அணி விளையாடி வருகிறது.