20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ந்தேதி தொடங்கியது. இதில் 16 நாடுகள் பங்கேற்றன. கடந்த 2-ந்தேதி முதல் சுற்று ஆட்டங்கள் முடிந்தன. பின்னர், ‘சூப்பர்12’ சுற்று ஆட்டங்கள் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. இதில் குரூப்-2 பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், குரூப்-1 பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறின.
வருகிற 9-ம் தேதி சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அடிலெய்டு மைதானத்தில் வருகிற 10-ந்தேதி நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் குரூப்-2 பிரிவில் முதல் இடத்தை பிடித்த இந்தியா, குரூப்1 பிரிவில் 2-வது இடத்தை பிடித்த இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது. இறுதி போட்டி 13-ந்தேதி மெல்போர்ன் மைதானத்தில் போட்டி நடக்கிறது.