சிங்கப்பூரில் சுமார் 6 கோடியே 70 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கூறப்படும் 40 அடி நீள டைனோசர் எலும்புக்கூடு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைக்காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஆவலுடன் திரண்டு வருகின்றனர். 1,400 கிலோ எடையிலான இந்த எலும்புக்கூடு டைரனோசொரஸ் ரெக்ஸ் (Tyrannosaurus Rex) இன டைனோசரின் வகையைச் சேர்ந்ததாகும். அடுத்த மாதம் ஹாங் காங்கில் ஏலம் விடப்படவுள்ள இந்த டைனோசர் எலும்புக்கூடு இம்மாத இறுதியில், கப்பல் மூலம் சிங்கப்பூரில் இருந்து அங்கு அனுப்பப்பட உள்ளது. இதற்கு முன் அமெரிக்காவில் இதே போன்ற டைரனோசொரஸ் ரெக்ஸ் ரக டைனோசரின் எலும்புக்கூடு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.262 கோடிக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.