திரைத்துறையில் பன்முக திறமைக் கொண்ட டி.ராஜேந்தர் கடந்த மாதம் சில தினங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இந்த நிலையில், சிகிச்சை முடிந்து இன்று காலை அவர் சென்னை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டி.ராஜேந்தர், ”மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்குச் சென்று அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று தற்போது உடல் நலம் தேறி நலமுடன் வந்ததற்கு காரணம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் உதயநிதி ஸ்டாலின் அவர்களும்தான். வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றதற்கு உதவிய முதல்வருக்கும் அவரின் சார்ந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.