சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை, நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இன்னும் பெயர் முடிவு செய்யப்படாத இந்த திரைப்படம் சூர்யாவின் 42ஆவது திரைப்படம் என்பதால் சூர்யா 42 என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. சூர்யா 42 திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் உடன் இணைந்து யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. மாயாவி, ஆறு, சிங்கம் திரைப்படத்துக்கு பிறகு சூர்யாவுடன் மீண்டும் இந்த திரைப்படத்தில் இணைகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். அதே போல, இயக்குநர் சிறுத்தை சிவாவின் வீரம் திரைப்படத்திலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். எனவே, ஏற்கனவே பரிச்சியமான இவர்களின் கூட்டணியில் நல்ல திரைப்படம் உருவாகும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.