இந்தியாவில் தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் ரூ.9 ஆயிரம் கோடி வங்கிக் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாத வழக்கில் குற்றசாட்டப்பட்டு வங்கிக் கடன் மோசடியில் ஈடுப்பட்டவர் தொழிலதிபர் விஜய்மல்லையா. இவர், கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டன் தப்பிச் சென்றார். இந்த நிலையில், அவர் எந்தவித பணப்பரிவத்தனைகளிலும் ஈடுபடக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தவு பிரப்பித்திருந்தது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மீறி தனது பிள்ளைகளுக்கு 40 மில்லியன் டாலர் இந்திய ரூபாய் படி சுமார் ரூ.317 கோடி பரிவர்த்தனை செய்ததாக பாரத ஸ்டேட் வங்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற உத்தரவுகளை விஜய் மல்லையா அவமதித்ததாகவும், அவரை குற்றவாளி என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யக்கோரி மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் மல்லையாவை நேரடியாகவோ அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராக பலமுறை கூறியுருந்தது. அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்தநிலையில், இந்த வழக்கில் விஜய் மல்லையா மீதான தண்டனை விவரத்தை கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி உச்சநீதிமன்றம் இன்றைய தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. இதனையடுத்து, இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு 4 மாத சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு ஸ்காட்லாந்து யார்டு பிறப்பித்த பிடிவாரண்டின் பிணையில் இருந்து மல்லையா பிரிட்டனில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.