சென்னை: மாராட்டிய மாநிலம் கோவா வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற விழாவில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் கலந்து கொண்டார் பேசினார். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள், மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக மாநில மொழிகளை அறிவித்தால் மக்கள் பயன்பெறுவார்கள் எனவும் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.