day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி : ஜோஷிமத்

மத்திய அரசுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி : ஜோஷிமத்

புதுடெல்லி : வடஇந்திய பகுதியில் அமைந்த உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் தரை பகுதியில் இருந்து 6 ஆயிரம் அடி உயரத்தில் ஜோஷிமத் நகரானது அமைந்து உள்ளது. இமயமலையையொட்டி அமைந்த புனித நகரம் எனப்படும் இந்நகரில் பிரசித்தி பெற்ற ஜோதிர்மத் கோவில் அமைந்துள்ளது. இந்நகரம் நிலநடுக்க பாதிப்புக்கு அதிகளவில் இலக்காக கூடிய இடங்களை கொண்டுள்ளது. இந்த சூழலில், கடந்த 15 நாட்களாக, வரலாற்று சிறப்பு மிக்க ஜோஷிமத் நகரின் பல பகுதிகளில் உள்ள வீடுகள், குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட கட்டிடங்களின் சுவர்களில் திடீர், திடீரென விரிசல் விட தொடங்கியது.

இந்நிலையில், அவசரகால நிலையை உணர்ந்த அரசும் உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து, மக்களை மீட்டு, நகராட்சி கட்டிடங்கள், குருத்வாராக்கள் மற்றும் பள்ளி கூடங்களில் அமைக்கப்பட்ட நிவாரண முகாம்களில் அவர்களை கொண்டு சென்று தங்க வைத்து உள்ளனர். ஜோஷிமத் நகரில் அதிக அளவில் விரிசல் விட்ட மலாரி இன், மவுண்ட் வியூ உள்ளிட்ட ஓட்டல்கள் மற்றும் வீடுகளை இடிப்பது என அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டது. இதுபற்றி அரசு நிர்வாகம் தனியாக குழு அமைத்து செயல்படுத்தி வருவதுடன், இஸ்ரோ, ஐ.ஐ.டி. அமைப்புகளுடன் இணைந்து இந்த விரிசலுக்கான காரணம் பற்றி ஆய்வும் செய்து வருகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு உடனடியாக தலையிட்டு, மத்திய அரசை புனரமைப்பு பணியில் ஈடுபடவும் மற்றும் ஜோஷிமத் நகர மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கவும் உத்தரவிட கோரி மனு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்ள சுப்ரீம் கோர்ட்டு இன்று மறுப்பு தெரிவித்து உள்ளது. இதனை இயற்கை பேரிடராக அறிவிக்க கோரி உத்தரகாண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யலாம் என மனுதாரருக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கி உள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!