நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 171வது படத்தில் நடிக்க உள்ளார். முன்னதாக, ஜெயிலர் படப்பிடிப்பு முடிந்த பிறகு ரஜினி லைகா நிறுவன தயாரிப்பில் 2 படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன், அடுத்த படத்தில் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் இணைந்து ‘லால் சலாம்’ திரைப்படத்தில் பணியாற்றுகிறார். இந்நிலையில் படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், விஷ்ணு விஷால், விக்ராந்த்துடன், ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.