சென்னை: “தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று பிபிசியின் ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதனையடுத்து , பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை இன்று (ஜன. 27) சென்னை பல்கலைக்கழகத்தில் திரையிட இந்திய மாணவர் சங்கத்தின் (எஸ்எஃப்ஐ) கிளை ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் ஆவணப்படத்தை திரையிட சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எஸ்எஃப்ஐ அமைப்பு கண்டனம் தெரிவித்தது. இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் கிளை உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் திறந்தவெளியில் மாணவர்கள் தங்களது மடிக்கணினி மூலமாக பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்த்துள்ளனர்.