அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக மாணவர்களின் கல்வி கடன் 1.6 டிரில்லியன் டாலராக இருக்கிறது. இது அங்குள்ள நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் சுமையாக உள்ளது. எனவே கடன் தொகையில் 50 ஆயிரம் டாலர் வரை அதிபர் ஜோ பைடன் தள்ளுபடி செய்ய மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மாணவர்களின் கல்வி கடனில் 10 ஆயிரம் டாலர் தள்ளுபடி செய்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதையொட்டி பைடனின் இந்த அறிவிப்பு அமெரிக்காவில் மாணவர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.