அசாம் மாநிலம் திப்ருகர் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் பிரிவு படிக்கும் மாணவர் ஆனந்த் சர்மா. இவரை மூத்த மாணவர்கள் ராகிங் செய்ததால் மன உளைச்சலில் இருந்த ஆனந்த் சர்மா அவர்களிடம் இருந்து தப்பிபதற்காக தான் தங்கியிருந்த விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனையெடுத்து அவரை தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனந்த் சர்மாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார், முன்னாள் மாணவர் ஒருவர், இந்நாள் மாணவர்கள் 4 பேர் என ஐந்து மாணவர்களை கைது செய்துள்ளனர்.
இது குறித்து முதல்வர் ஹேமந்த பிஸ்வாஸ் தனது ட்விட்டரில் “திப்ருகர் பல்கலைக்கழக மாணவர் ரேக்கிங் காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த வழக்கை மாவட்ட நிர்வாகம் அதிக கவனத்துடன் கையாளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள இளைஞருக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட வேண்டாம்” எனவும் தெரிவித்துள்ளார்..