தெலங்கானா மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராட்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சந்திரசேகர ராவ் பாரத் ராட்டிர சமிதி என்ற பெயரில் தேசிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாகவும் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் அவரே அறிவிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து, சந்திரசேகரராவின் தேசிய கட்சி தொடங்குவது குறித்த முன்னெடுப்பை கொண்டாடும் விதமாக அவரின் தொண்டர் ஒரு வினோத வேலையை செய்துள்ளார். அதுதொடர்பாக வெளியான வீடியோவில், வாரங்கல் நகரில் 200 தொழிலாளர்களை வரிசையில் வரவழைத்து, மது பாட்டில்கள், உயிருடன் கோழி ஆகியவற்றை டிஆர்எஸ் நிர்வாகி ராஜநல்லா ஸ்ரீஹரி வழங்கியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
#telengana