திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர் நகர் பகுதியில் உள்ள சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ள நெடுஞ்சாலை துறையினர் ஆம்பூர் பகுதியில் மேம்பாலம் அமைக்க சாலை விரிவாக்கம் செய்ய இருக்கின்றனர். இதற்காக, அங்கு நெடுஞ்சாலையின் சாலைபக்கவாட்டில், அமைக்கப்பட்டு இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலையை அப்புறப்படுத்தி மற்றொரு இடத்தில் வைக்க காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடுகள் செய்துவந்தனர். இந்தநிலையில், சிலையை மாற்றி அமைக்க தேர்வு செய்த இடம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான காளியம்மன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இருப்பதாகவும் அந்த இடத்தில் காமராஜர் சிலை மாற்றி அமைக்க கூடாது என்றும் கோவில் நிர்வாகத்தினர் காங்கிரஸ் கட்சியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். இருதரப்பினரிடமும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு காமராஜர் சிலையை வேறு இடத்தில் அமைக்க முடிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து காமராஜர் சிலை மாற்றி அமைக்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது.