தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் நாட்டிலுள்ள துறைமுகங்களில் பாஜகவின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் கடந்த எட்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி பணிகளால் 850 மில்லியன் மெட்ரிக் டன்னாக இருந்த துறைமுகங்களின் கொள்ளளவு 1600 மில்லியன் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது என்று பேசியுள்ளார். மேலும், மத்திய அரசின் துறைமுக மசோதாவால் மாநிலத்தின் உரிமை பறிக்கப்படாது, மாநிலங்களோடு இணைந்தே செயல்பட்டு வருகிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.