உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவற்றில் இந்தியர்கள் தலைமை பதவி வகித்து வருகின்றனர். இதில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக நாதெள்ள சத்யா, அடோப் சிஇஓ-வாக சாந்தனு நாராயண், கூகுள் சிஇஓ-வாக சுந்தர் பிச்சை, ட்விட்டர் தலைவர் பராக் அகர்வால் ஆகியோர் ஏற்கனவே வரிசைக்கட்டியுள்ள நிலையில், தற்போது புதியவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லக்ஷ்மண் நரசிம்மன் பிரபலமான காபி அருந்தக நிறுவனமான ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷனில் தலைமைச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீக காலமாக சிறிது சரிவில் இருக்கும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க லக்ஷ்மண் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.