இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் மாதக்கணக்கில் போராட்டங்களில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியதையடுத்து கோத்தபய தப்பியோடி தலைமறைவானார். இதையடுத்து, அவர் மாலத்தீவுக்கு சென்றார். அங்கும் கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து, கோத்தபய மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றார். இந்த நிலையில், விசா கால அவகாசம் முடிவடைவதால், சிங்கப்பூரில் இருந்து கோத்தபய நாளை தாய்லாந்துக்கு சென்று தஞ்சமடையவுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து, தங்களது நாட்டில் கோத்தபய அடைக்கலம் கேட்கவில்லை என தாய்லாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும், தாய்லாந்து வருவதற்கு கோத்தபய ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எங்கள் நாட்டில் தங்குவதற்கு தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.