15ஆவது ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இறுதிச்சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 147 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால், இலங்கை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆண்டிற்கு பிறகு 2022ஆம் ஆண்டான இந்தாண்டும் 6ஆவது முறையாக ஆசியக்கோப்பையை தனதாக்கியது இலங்கை அணி.