கொழும்பு: இலங்கையில் 75-வது சுதந்திர தின விழா இன்று தலைநகர் கொழும்பில் உள்ள காலிமுக திடலில் பிரதான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் அதிபர் ரணில் விக்ரம சிங்கே, பிரதமர் தினேஸ் குணவர்தன முன்னிலையில் நடைபெற்றது.இலங்கை சுதந்திர தின விழாவில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். மாலை 6.45 மணிக்கு அதிபரின் உரை ஊடகங்களின் மூலம் ஒளி, ஒலிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தமிழர்களுக்கு தன்னாட்சி அளிக்காததை கண்டித்து தமிழர்கள் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டங்கள் நடந்தது. வீடுகளில் கறுப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. இன்றைய தினத்தை கறுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.பேரணிக்கு ஆதரவாக வர்த்தகர்கள் தங்களது கடைகளை அடைத்தனர். யாழ்ப்பாணம் மாவட்டம் முழுவதும் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு சாலைகள் வெறிச் சோடி காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.