பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்சல்ஸில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் சார்பில் நடைப்பெற்று வரும் FIH ப்ரோ லீக் 2021-22 ஹாக்கி போட்டியில் இன்று மற்றும் நாளை கேப்டன் சவிதா தலைமையிலான இந்திய மகளிர் ஹாக்கி அணி பெல்ஜியத்தின் மகளிர் ஹாக்கி அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 22 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. முதல் இரண்டு இடங்களில் அர்ஜென்டினா மற்றும் நெதர்லாந்து அணிகள் உள்ளன. இந்த விளையாட்டை நடத்தும் பெல்ஜியம் அணி 8 போட்டிகளில் பங்கேற்று 12 புள்ளிகளுடன் 7ஆவது இடத்தில் உள்ளது. அதேபோல, இந்திய ஆண்கள் ஹாக்கி அணி இன்று மற்றும் நாளை இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் பெல்ஜியம் ஆண்கள் ஹாக்கி அணியை எதிர்கொள்கிறது. இதுவரை 12 போட்டிகளில் விளையாடிவுள்ள இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 27 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பெல்ஜியம் ஆண்கள் ஹாக்கி அணியும் 12 போட்டிகளில் விளையாடி 27 புள்ளிகளுடன் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு சமமாக உள்ளது. டச் ஆண்கள் ஹாக்கி அணி 10 போட்டிகளில் விளையாடி 28 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.