day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில், இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது. முதலில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால், முதலில் களத்தில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்தது. இதன் தொடர்ச்சியாக 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட்டை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.1 ஓவரில் 212 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் வெற்றியை தென்னாப்பிரிக்கா அணி பெற்றது. இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் அடுத்தப்போட்டி நாளை மறுநாள் (12ம் தேதி) ஒரிசா மாநிலத்தில் உள்ள பாராபதி மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

—-

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!