மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கும் சிறப்பு முகாம் இன்று (நவ.28) தொடங்கியது. தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி முகாமினை நேரில் சென்று ஆய்வு செய்தார் அப்பொழுது அவர் கூறுகையில்: புதிய தொழில்நுட்பத்துக்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது. “இதுவரை 15 லட்சம் மின் இணைப்புதாரர்கள், ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்துள்ளனர். இதற்காக இன்னும் விரிவாக பணிகளை மேற்கொள்ள தமிழக முதல்வர் உத்தரவிட்டு தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் செயல்பட்டு வருகின்ற 2811 பிரிவு அலுவலகங்களில் இன்று முதல் வருகின்ற டிசம்பர் 31-ம் தேதி வரை, மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம், அரசு மானியம் வழங்கி 100 யூனிட்டிற்குள்ளாக பயன்படுத்தக்கூடிய குடிசைகள், 100 யூனிட் இலவச மின்சாரம், ஏற்கெனவே இருக்கின்ற அரசு இலவச மின் திட்டங்கள், அரசு வழங்கும் மானியங்கள் அனைத்து நடைமுறைகளும் தொடர்ந்து பின்பற்றப்படும். மின்சரா வாரியத்தை மேம்படுத்த வேண்டும். அதேபோல், புதிய தொழில்நுடப்த்துக்கு ஏற்ப மின்சார வாரியத்தை நவீனப்படுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.