ஆயுத பூஜையை முன்னிட்டு தமிழகத்தில், பெரும்பாலான கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனி, ஞாயிறு வார இறுதி விடுமுறை நாட்கள் என்பதாலும், வரும் 4ம் தேதி ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. மேலும், 5ம் தேதி தமிழகத்தின் தென் மாவட்ட மக்களால் பெரிதும் விமரிசையாக கொண்டாடப்படும் தசரா பண்டிகை என்பதாலும், பலரும், இன்று முதல் சொந்த ஊர்களுக்கு செல்லதிட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில், இன்றும், நாளையும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பஸ்களுடன் கூடுதலாக, 2,050 சிறப்பு பஸ்களும்; மற்ற ஊர்களில் இருந்து 1,650 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.