கேரள மாநிலத்தில் தென் மண்டல கவுன்சில் 30ஆவது கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று தொடங்கி நடந்து வருகிறது. இதில், தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய தென் மாநில முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய தெற்கு யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றுள்ளனர்.