இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவுடன் முதலில், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி முடித்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்றது. இந்த நிலையில், மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இதில், முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது. இந்த போட்டியில், கேப்டன் ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னதாக மழை காரணமாக போட்டி 50 ஒவரில் இருந்து 40 ஓவராக குறைக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து, முதலில் களம் இறங்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்தனர். இதில், அதிகப்பட்சமாக கிளாசென் 74 ரன்களும், மில்லர் 75 ரன்களும், குவின்டன் டி காக் 48 ரன்களும் விளாசினர். இந்தியாவின் தாக்குர் 2 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்ணோய், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 40 ஓவர்களின் 8 விக்கெட் இழப்புக்கு முடிவில் 240 ரன்கள் எடுத்தனர். இதில், சஞ்சு சாம்சன் 86 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் விளாசினர். இதன்மூலம், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவுடனான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னப்பிரிக்க அணி வெற்றிப்பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து, இரு அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் ராஞ்சியில் நடக்கவுள்ளது.