தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகின்றது. இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சலால் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இதுவரை மேற்கொள்ளப்பட்ட எச்1என்1 பரிசோதனையில் 1,267 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, 15 நாட்களில் 6000 பரிசோதனை கிட் வாங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. நேற்று வரை தமிழ்நாட்டில் 5,064 பேருக்கு எச்1 என்1 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.