மத்திய நுகர்வோர் அமைச்சகம் சில்லறை வணிகம் மற்றும் மொத்த விலை குறித்து வெளியிட்டுள்ள தரவுகளின் படி, கடந்த ஓர் ஆண்டில் கோதுமையின் சில்லறை விலை ரூ.27லிருந்து ரூ.31ஆக 14 சதவிகிதம் அதிகரித்து விற்பனையாகி வந்த நிலையில், தற்போது ரூ.36.2 விலை மேலும் உயர்ந்து விற்பனையாகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 19% அதிகமாகும். இதேபோல் அரிசியின் விலை கிலோவிற்கு ரூ.38.2 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 8% அதிகமாகும்.