மகாராஷ்டிரத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), பிரபல ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தை பவுடர் பயன்பாட்டால் பச்சிளம் குழந்தைகளின் தோல் பாதிக்கப்படலாம் என மத்திய மருந்து ஆய்வகத்தின் உறுதியான அறிக்கையின் முடிவில் தெரிவித்துள்ளது. இதனால், அந்த நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தை பொதுசுகாதார நலன் கருதி ரத்து செய்துள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு மருந்து மற்றும் அழகுசாதன பொருள் சட்டம் 1940 மற்றும் விதிகளின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ள அந்த மாநில அரசாங்கம் சந்தையில் இருக்கும் பவுடர் இருப்பை திரும்பப் பெறுமாறும் அந்த நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.