பெமினா இதழ், 2022ஆம் ஆண்டுக்கான இந்திய அழகி போட்டியை மும்பையில் நடத்தியது. இந்தப்போட்டியில், மும்பையில் பிறந்து கர்நாடக மாநிலத்தில் வசித்து வரும் 21 வயதான பட்டதாரி இளம்பெண் சினி ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாவது மூன்றாவது இடத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த ரூபல் ஷெகாவாத் மற்றும் உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த ஷினதா சவுஹான் தேர்வு செய்யப்பட்டனர். சினி ஷெட்டி உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.