சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர்களை நியமிப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கியஅமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அறநிலையத்துறை சார்பில், அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக 23 மாவட்டங்களில் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டு, அறங்காவலர் பதவிகளுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
அறங்காவலர்கள் தேர்வு தொடர்பாக அனைத்து கோயில்களுக்கும் ஒரே மாதிரியான விண்ணப்பங்களை இன்றைக்குள் (மார்ச் 11) இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அறநிலையத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.