‘எதுக்கு உன்ன பாத்தேன்னு நெனைக்க வைக்கிறே..’ என்ற பாடல் மூலம் தமிழ் இசை உலகில் அறிமுகமான, பம்பா பாக்யா பிறகு, ஏ.ஆர்.ரகுமான், ஹிப் ஹாப் ஆதி போன்ற பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார். இவர், எந்திரன் 2.O, பிகில், சர்கார், சர்வம் தாளமயம், யாரவின் சியோட் ஆகிய படங்களில் பாடியுள்ளார். மேலும், விரைவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் ‘பொன்னி நதி’ பாடலை பாடி அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ள நிலையில், நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 42. பாடகர் பம்பா பாக்யா மறைவு குறித்து குடும்பத்தினருடன், திரையுலகினரும் அவரின் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.