சிங்கப்பூரில் நடைபெற்றுவரும் சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவின், காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி. சிந்து, சீன வீராங்கனை ஹன் யூ-வை 17-21, 21-11, 21-19 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். அதேபோல, இந்தியாவின் சாய்னா நேவால், ஜப்பான் வீராங்கனை அய ஒஹோரி உடன் மோதி 13-21, 21-15, 20-22 என்ற புள்ளி கணக்கில் தோல்வியடைந்தார்.