முஃப்தி என்ற கன்னட திரைப்படத்தின் தமிழாக்கமாக உருவாகி வருகிறது நடிகர் சிம்புவின் ’பத்து தல’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவரும் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததும் சிம்பு, தந்தை டி.ராஜேந்தரின் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். இந்த நிலையில், தற்போது சிம்பு சென்னை திரும்பியதையடுத்து பத்து தல திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மைசூரில் படக்குழு நடத்தியது. இந்த நிலையில், தற்போது ’பத்து தல’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விரைவில் சிம்புவின் ’பத்து தல’ திரைப்படத்தை திரையரங்கில் காணலாம் என ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.