கோமாளி படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் லவ் டுடே. யுவன் ஷங்கர் ராஜா இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இவானா, ராதிகா, யோகி பாபு, ரவீனா, ஃபைனலி பரத், ஆதித்யா கதிர், ஆஜித், விஜய் வரதராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தினேஷ் புருஷோத்தமன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் சாச்சிட்டாளே என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது பிரதீப் ரங்கநாதன் எழுதி, சித் ஸ்ரீராம் பாடியுள்ள என்னை விட்டு என்ற பாடலின் ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரைலரை இன்று இரவு 7.02 மணிக்கு நடிகர் சிம்பு வெளியிட இருப்பதாக பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.