சென்னை உயர்நீதிமன்றம் 1 மற்றும் 2ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு வீட்டுப்பாடம் தர தடை விதித்துள்ள நிலையில், அதனை முறையாக அமல்படுத்த பள்ளிகளில் பறக்கும் படையைக் கொண்டு ஆய்வு செய்து 1 மற்றும் 2ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் தராமல் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர்களின் ஆய்வுக்குப் பின் வீட்டுப்பாடம் தரப்பட்டதா? இல்லையா? என்ற அறிக்கையை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.