கொரியா நாட்டின் சாங்வான் நகரில் சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் 2022 போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ரிதம் சங்வான், அனீஷ் பன்வாலா ஜோடி, செக் குடியரசின் டெடோவா, போத்ரஸ்கி ஜோடியை 25 மீட்டர் ரைபில் ஃபயர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் வெண்கலப் பதக்கத்துக்காக எதிர்கொண்டது. இதில், இந்திய அணி 16-12 என்ற புள்ளி கணக்கில் வெற்றிப்பெற்றது. இதையடுத்து, சாங்வான் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா இதுவரை 5 தங்கம், 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 14 பதக்கங்களை வென்றுள்ளது.