அமெரிக்க நாட்டின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், 40 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த தொடருடன் தொழில் முறையிலான டென்னிசில் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து விடைபெற இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், இவரின் விளையாட்டை காண டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர். இதற்கிடையில், 2ஆவது சுற்று போட்டியில் தரவரிசை பட்டியலில் 2ஆவது இடத்தில் உள்ள எஸ்தோனியா வீராங்கனை அனெட் கோன்டாவெய்ட்டை 7-6 (4), 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி, 3வது சுற்றுக்கு செரீனா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். முன்னதாக, தொடக்க சுற்றில் மான்டினீக்ரோ நாட்டு வீராங்கனை கோவினிச்சை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்தார். அடுத்த சுற்றில், ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக்கை செரீனா சந்திக்கவுள்ளார்.