செவ்வாய்க்கிழமையான நேற்றைய நாள் முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 59,842.21 என்ற புள்ளிகளுடன் நிறைவுற்ற நிலையில், புதன்கிழமையான இன்று 59,938.05 என்ற புள்ளிகளுடன் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10.48 மணிக்கு 60,149 என்ற புள்ளிகளை எட்டியது. கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதாவது, 4 மாதங்களுக்குப் பிறகு மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதுபோல, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 93.75 புள்ளிகள் அதிகரித்து 17,919 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.