ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில தினங்களாகவே வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால், ஸ்பெயின் நாட்டின் தெற்குப்பகுதி மற்றும் போர்ச்சுகல் நாட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீயில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். இவர்களை முகாம்களில் அந்த நாட்டு அரசு தங்க வைத்துள்ளது. 15 விமானங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. எனினும் தீயை இதுவரை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. மேலும் தீ பரவ வாய்ப்புள்ளதால், தீ விபத்து உருவாகி இருக்கும் பகுதிகளில் இருந்து அந்த நாட்டு மக்களை, வீடுகளை விட்டு வலுக்கட்டாயமாக அதிகாரிகள் வெளியேற்றி வருகின்றனர். 40C அதிக வெப்பம் காரணமாக காடுகளில் ஏற்பட்ட தீ குடியிறுப்பு பகுதிகளுக்கும் பரவியதால் வீடு, வாகனங்களை இழந்து மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும், சுமார் இருநாடுகளை சேர்ந்த 281 பேர் இந்த விபத்தில் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.