புதுடெல்லி: பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமேற்கு மாநிலங்களில் கடும் குளிர் தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஎம்டிவ்(IMD) இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி இன்றைய தினம் (ஜன 9) பஞ்சாப், ஹரியாணா, உ.பி.யில் கடும் குளிர் நிலவும் ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்தில் குளிர்ந்த காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது.
இன்று காலை வெளியிட்ட அறிக்கையின் படி இன்றைய தினம் (ஜன 9) பஞ்சாப், ஹரியாணா, உ.பி.யில் கடும் குளிர் நிலவும் ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசத்தில் குளிர்ந்த காற்று வீசும் என்று தெரிவித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் அடர்த்தியானது முதல் மிகவும் அடர்த்தியானது வரையிலான பனி நிலவும் என்றும் இதனால் எதிரே இருப்பவர்களையோ அல்லது வாகனங்களையோ கண்டறிவது கடினமாகும் என்றும் கணித்துள்ளது. 25 மீட்டர் முதல் 50 மீட்டர் வரை இந்த பனி மூட்ட அடர்த்தி நிலவலாம் என்று கணித்துள்ளது.
இந்நிலையில் இன்றுடன் பிஹார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், விதர்பா, சத்தீஸ்கர், மேற்கு மத்தியப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வாட்டிவதைக்கும் குளிர் படிப்படியாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியிலும் வரும் 15 ஆம் தேதி வரை மாணவர்களுக்கு விடுமுறை அளிக்குமாறு தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.